டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து பாகிஸ்தான்!

Tuesday, August 23rd, 2016

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என அவுஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது. இதனால் அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கான விளம்பில் நின்று கொண்டிருந்தது.

அவுஸ்திரேலியா பிடித்த முதல் இடத்தை இந்தியா கடந்த 18-ந்திகதி பிடித்தது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றாவிடில் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

தற்போது மழையினால் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்து தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியதால் பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா 108 புள்ளிகளடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அதேபுள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

Related posts: