டெல்லி அணியை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை அணி!

Wednesday, March 27th, 2019

டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 5 ஆவது ஐ.பி.எல் போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணி, அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் ஷிகார் தவான் அதிகபட்சமாக 51 ரன்களை குவித்திருந்தார். சென்னை அணி சார்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் 19.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் 4 புள்ளிகள் பெற்று சென்னை அணி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Related posts: