டெனிஸ் பட்டத்தை வென்று தரவரிசையை தக்கவைத்தார் முர்ரே!

Wednesday, November 2nd, 2016

வியன்னா பகிரங்க டெனிஸ் போட்டில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் வீரர்கள் தர வரிசையில் அன்டி முர்ரே 10,185 புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார்.

வியன்னா பகிரங்க டெனிஸ் போட்டி ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 13ஆம் நிலையில் இருக்கும் பிரான்ஸ் வீரர் சோங்காவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் போது ஆரம்பம் முதலே அசத்திய முர்ரே 6 : 3, 7 : 6 (8 : 6) என்ற நேர்செட்டில் சோங்காவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஆன்டி முர்ரே 10,185 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். செர்பியா வீரர் ஜோகோவிச் 10,600 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இருவருக்கும் இடையே வெறும் 415 புள்ளிகள் தான் வித்தியாசம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இம்மாத இறுதியில் நடைபெற உள்ள உலக சுற்றுலாப் போட்டியில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல், அன்டி முர்ரே சம்பியன் பட்டம் வென்றால் அவர் தர வரிசையில் முதலிடத்தை கைப்பற்ற முடியும்.

colnovak-djokovic-720x480-720x480145734732_4963973_01112016_aff_cmy (1)

Related posts: