டி20போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி!

Monday, March 27th, 2017

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டயுள்ளது.

பிரிட்ஜ்டவுனில் உள்ள  கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111ரன்களை மட்டுமே எடுத்து. மேற்கிந்திய தீவுகள் அணியில் சார்பில் கேப்டன் பிராத்வெய்ட் 34 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் சதாப் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினனார்.

112 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 115 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் சோயிப் மாலிக் 38 ரன்களையும்,பாபர் ஆஸம் 29 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில்  வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

Related posts: