செவிலியாவை வீழ்த்தியது பாசிலோனா

Monday, April 10th, 2017

லா லிகா தொடரில் மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-–0 என செவிலியாவை வீழ்த்தியது பாசிலோனா அணி.

லா லிகா தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி கிளப் அணிகளான பாசிலோனா- செவியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் தொடக்கத்தில் இருந்தே பர்சிலோன அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25-வது நிமிடத்தில் சுவாரஸ் அபாரமாக முதல் கோலை அடித்தார். மெஸ்சி கொடுத்த பாஸை, சுவாரஸ் அற்புதமாக பைசைக்கிள் கிக் அடித்து கோலாக்கினார்.

அடுத்த 3-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். அத்துடன் ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பாசிலோனா 3- –0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்ல. இதனால் பாசிலோனா 3- –0 என வெற்றி பெற்றது. நடுவரிடம் தகராறு செய்ததால் இரண்டு கிளப் போட்டிகளில் மெஸ்சி தடை பெற்றிருந்தார். அதன்பின் தற்போது களம் இறங்கிய அவர் இரண்டு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த பருவகாலத்தில் 41 போட்டிகளில் 40 கோல்கள் அடித்துள்ளார்.

Related posts: