சென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி!

Wednesday, March 14th, 2018

துடுப்பாட்ட வீரர்களின் பலத்தால் சென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் மத்தி பழைய மாணவர் அணி வெற்றி பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.  ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான 112 ஆவது வடக்கின் மாபெரும் பேர் பெரும் துடுப்பாட்டப் போட்டிகள் கடந்த 8,9 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடை பெற்று முடிந்தது

தொடர்ந்து இரு கல்லூரிகளின் பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள்  மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியானது 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் பழைய மாணவர் அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அன்புஜன் 57, அமிர்தஜன் 54,பிருந்தாபன் 25, சிறிதரன் 20,டானியல் 18 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்

பந்து வீச்சில் யாழ்ப்பாணம் மத்தி பழைய மாணவர் அணி சார்பாக ஜெரிக் துசாந் 4 விக்கெட்டுக்களையும் ராகவன் ,செலரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் அலன்ராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்

256 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு பதிலளித்தாடிய யாழ்ப்பாணம் மத்தி பழைய மாணவர் அணி 35.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது .துடுப்பாட்டத்தில் பிரியலக்~ன் 78 செல்ரன் 50 டர்வின் 43 அலன்ராஜ் 29 றஜீவன் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்

சென்.ஜோன்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் டானியல் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்

Related posts: