சென்னையில் அலஸ்டர் குக் சாதனை!

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் அலஸ்டர் குக் விரைவாக 11 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இன்று சென்னையில் தொடங்கிய டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை குக் 139 டெஸ்டில் 10998 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதில் 30 சதங்களும், 53 அரை சதங்களும் அடங்கும்.
இன்னும் 2 ஓட்டங்கள் எடுத்தால் ‘டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்கள்’ என்ற மைல்கல்லை எட்டும் நோக்கில் இன்று களம் இறங்கினார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 10-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இவர் 10 வருடம் 290 நாட்களில் 252 இன்னிங்ஸ் மூலம் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.
சங்கக்காரா, சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பொண்டிங், ராகுல் டிராவிட், கல்லிஸ், ஜெயவர்தனே, ஆலன் பார்டர் ஆகியோர் 11 ஆயிரம் ஓட்டங்களை தாண்டியுள்ளனர்.
32 வயதான அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணியின் தலைவர் ஆவார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். அப்போது அவருக்கு 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|