சுழல் – வேகப் பந்து வீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிலிருந்து இருவர்!

Saturday, May 12th, 2018

நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டியை நோக்காகக் கொண்டு இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய ஸ்பின் பந்துவீச்சு மற்றும் வேகப் பந்துவீச்சுஆலோசகர்கள் இருவரது ஒத்துழைப்பினை இரு வாரங்களுக்கு பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய Petes Sleep மற்றும் Tiaothy McCaskill ஆகிய ஆலோசகர்கள் கடந்த புதன்கிழமை(09) பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிப் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா இலங்கை அணி மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி எதிர்வரும் ஜூன் 06ம்திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: