சாதித்த ரொஜர் பெடரர்!

அமெரிக்காவின் மயாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை சுவிட்ஸர்லாந்தின் முன்னணி வீரர் ரொஜர் பெடரர் மூன்றாவது முறையாக சுவீகரித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் முன்னணி வீரர் ரபெயல் நடாலை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட் கணக்கில் ரொஜர் பெடரர் தோற்டிகத்தார்.
போட்டியின் முதல் செட்டை 6 க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய ரொஜர் பெடரர், இரண்டாவது செட்டையும் 6 க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கி, சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டார்.
இதன்மூலம் இவ்வாண்டு மூன்றாவது சாம்பியன் பட்டத்தை அவர் சுவீகரித்துள்ளார்.
அத்துடன் இவ்வாண்டு விளையாடிய 20 போட்டிகளில் 19 இல் ரொஜர் பெடரர் வெற்றிபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி இவ்வாண்டுக்கான பிரன்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆரம்பமாகும் வரை ஒய்வெடுக்கவுள்ளதாக ரொஜர் பெடரர் கூறியுள்ளார்.
Related posts:
|
|