சாதனையை தகர்த்தெறிந்த கப்டன் கூல்!

Friday, December 22nd, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதலாவது ரீ20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் இந்திய அணியின் விக்கட் காப்பாளருமான கப்டன் கூல் சில சாதனைகளை தகர்த்தும் சமன் செய்துமுள்ளார்.

ரீ20 போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புகளை நிகழ்த்தியவர் எனும் சாதனையை டோனி நேற்றைய போட்டியில் முறியடித்துள்ளார். இதன் முன்னர் தென்னாபிரிக்க அணியின்  டீ வில்லியர்ஸ் 72 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு முதலிலிடத்திலிருந்தார், டோனி நேற்றைய போட்டியில் நான்கு ஆட்டமிழப்புகளை நிகழ்த்தியதனூடாக இச் சாதனையை டீ வில்லியர்ஸிடமிருந்து தட்டிச் சென்றுள்ளார். மொத்தமாக 74 ஆட்டமிழப்புகளை நிகழ்த்தியதனூடாக முதலிடத்தில் கைப்பெற்றியுள்ளார்.

மேலும் ரீ20 போட்டிகளில் அதிக பிடியெடுப்புகளை மேற்கொண்ட விக்கட் காப்பாளர்களில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் சாதனையையும் டோனி சமன் செய்துள்ளமையும் கப்டன் கூலின் அடுத்த சாதனையாகும். சங்கக்கார 133 பிடியெடுப்புகளை எடுத்து முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: