சர்வதேச போட்டிக்கு திரும்பும் முஸ்டாபிஜூர் ரஹ்மான்!

Thursday, December 22nd, 2016

வங்காள தேச அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 9 மாதங்களுக்குப் பின் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளார்.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடினார். அதன்பின் ஐ.பி.எல். தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்தவுடன் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிக்காக விளையாடினார். அப்போது அவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆகவே, கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் முழுமையாக ஓய்வில் இருந்தார். வங்காள தேச அணி இந்த மாதம் 26ம் திகதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸட்சர்ச்சில் அந்த அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறது.

இதற்கான 15 பேர் கொண்ட வங்காள தேச அணியில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

rahman

Related posts: