சமிந்த வாஸ் தொடர்பில் கவலை தெரிவித்த அமைச்சர் நாமல்!

Tuesday, February 23rd, 2021

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று வாய்மூல வினாவிடைக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில் சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.

இந்த நிலையில் அவர் இவ்வாறு செயற்பட்டமை வருத்தத்துக்கு உரிய விடயம் என்றும் கூறிய நாமல், ஊதியம் தொடர்பான பிரச்சினை இங்கு இல்லை என்றும் கூறினார்.

 000

Related posts: