மோசமான வரலாற்று சாதனை

Thursday, November 23rd, 2017

 

கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமான சாதனையைப் பதிவுசெய்துள்ளனர்.

இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மழைகாரணமாக முதல் இரண்டுநாள் ஆட்டத்தின் பெரும் பகுதிபாதிக்கப்பட்டது.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிகளவில் ஒத்துழைக்காததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரியளவில் பந்துவீசவில்லை.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இலங்கைஅணியில் ஹேரத்,டில்ருவான் பெரேராஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இரண்டு இனிங்ஸிலும் சேர்த்து இந்தியா 110.1 ஓவர்கள்(83.4 மற்றும் 26.3) வீசி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது.

இந்த 17 விக்கெட்டுக்களையும் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் கைப்பற்றினார்கள். முதல் இனிங்ஸில் அஸ்வின் 8 ஓவரும் ஜடேஜா ஒரேயொருஓவரும் மட்டுமேவீசினார்கள்.

2 ஆவது இனிங்ஸில் ஜடேஜா ஒருஓவர் வீசினார். ஆஸ்வின் ஓவர்கள் வீசவில்லை. இரு இனிங்ஸிலும் 110.1 ஓவரில் இருவரும் 10 ஓவர்கள் மட்டுமே வீசினார்கள்.ஆனால் ஒருவிக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்தியமண்ணில் இதுவரை 262 டெஸ்ட் போட்டிகள் நடந்தன. இதில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருவிக்கெட் கூட வீழ்த்தாதஅதிசயமும் மோசமானசாதனையும் கொல்கத்தாடெஸ்டில் தான் இடம்பெற்றுள்ளது.

இதேவேளையில் இலங்கையில் சுழற்பந்துவீச்சாளர் டில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுகளைவீழ்த்தினார்

Related posts: