சங்காவினால் வெற்றி பெற்றோம் – அஞ்சலோ மத்தியூஸ்!

Saturday, June 10th, 2017

இந்திய அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் ஆலோசனைகளை கேட்டு, அதனை அப்படியே களத்தில் செயல்படுத்தியதாக இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூல் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போட்டியில், இந்திய அணியை இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் பின் மெத்தியூஸ் கருத்து குறிப்பிடுகையில், “இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி. நாங்கள் வெல்வோம் என்று ஒருவர் கூட எதிர்பார்க்கவில்லை. இதுதான் எங்கள் மீதான அழுத்தத்தை அகற்றியது.

நாங்கள் களத்தில் எங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொண்டோம். நாங்கள் சுதந்திரமாக விளையாடும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இதுதான் எங்கள் டிரேட்மார்க்.  நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் இலங்கை இரசிகர்கள் எங்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றனர். அவர்கள் கேளிக்கை விரும்பிகள், நாங்கள் அவர்களுக்காக வெற்றி பெற விரும்பினோம்.

குறிப்பாக வெள்ளத்தில் நிறைய உயிரிழப்பை சந்தித்து விட்டோம். குறைந்தது இந்த வெற்றி மூலம் அவர்களிடத்தில் சிறு புன்னகையை வரவழைத்துள்ளோம்.உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவது போன்ற சூழல் இருந்தது. ஆரவாரத்துடன் சூழல் பிரமாதமாக இருந்தது. இந்திய இரசிகர்களும் அவர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். எங்களுக்கு ஆதரவு அளித்த இலங்கை இரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குசல் பெரேரா காயமடைந்து பாதியிலேயே திரும்பி வந்தது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தோல்வி ஏற்பட்டிருந்தால் கூட பெரிய விடயமாக பார்க்க மாட்டேன்.  மெண்டிஸ், குமார் சங்கக்காராவைச் சந்தித்து துடுப்பாட்ட ஆலோசனைகளைப் பெற்றார். இந்தப் ஆடுகளங்களில் எப்படி துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது உட்பட பல விடயங்களை அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.போட்டிக்கு முதல் நாள் வீரர்கள் சங்கக்காராவைச் சந்தித்து பெற்ற ஆலோசனைகளை களத்தில் அமுல்படுத்தினர். மீண்டும் கூற வேண்டுமெனில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஒருவரும் நினைக்கவில்லை. எனவே நல்ல கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தினால், நாங்கள் எந்த ஒரு அணியையும் வீழ்த்துவோம்’ என கூறினார்.

Related posts: