க்லியன் எம்பாப்பேவை சாதனை தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் சவூதி அரேபியா!

Tuesday, July 25th, 2023

பிரபல கால்பந்து வீரர் க்லியன் எம்பாப்பேவை, சாதனை தொகையான 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுப்பதற்கு சவூதி அரேபியாவின் அல் – ஹிலால் கழகம் முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, தமது கழகத்திலிருந்து அவரை விடுவிப்பதற்கு பெரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கழகம் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அல் ஹிலால் கழகம் ஒரு வருட ஒப்பந்தம் மூலம் அவரை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

அல்-ஹிலால் அணியில் எம்பாப்பே இணைந்து கொண்டால் ஆண்டுக்கு 700 மில்லியன் யூரோக்கள் வரை அவர் வருவாய் ஈட்டுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் நெய்மரை, பார்சிலோனா அணியில் இருந்து விடுவிப்பதற்கு, பெரிஸ் செயிண்ட் – ஜெர்மைன் அணி, 253 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

இந்த ஏலத்தொகை கால்பந்து வீரர் ஒருவருக்காக முன்வைக்கப்பட்ட அதிகூடிய ஏலத்தொகை என்ற உலக சாதனையை தன்வசப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், தற்போது, க்லியன் எம்பாப்பேவுக்காக, சவூதியின் அல் ஹிலால் கழகம் முன்வைத்துள்ள 300 மில்லியன் அமெரிக்க டொலர், அந்த சாதனையை முறியடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: