கோலியை பாராட்டிய ஜெயசூர்யா!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராட் கோலியின் செயல்பாடு எல்லாவிதத்திலும் பிரமாதமாக இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் செயல்பாடு கடந்த இரண்டு வருடங்களாக அருமையாக உள்ளது, அதனால் தான் அவர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.
தற்சமயம் இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குவதாக கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் அணி கேப்டனாக செயல்படும் வீராட் கோஹ்லியின் கேப்டன் ஷிப் மற்றும் பேட்டிங் திறன் தன்னை வியக்க வைப்பதாக கூறிய அவர், கோஹ்லி எப்போதும் பெரிய ஓட்டங்களை எடுக்கவே முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா தற்போது இலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|