கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்கள்!

Saturday, June 11th, 2016
சர்வதேச அளவில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இதில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ முதலிடம்‌ பிடித்துள்ளார். ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர் இந்தாண்டு இதுவரையிலும் சுமார் 572 கோடி ரூபாய் பணத்தை ஈட்டியுள்ளார்.

கால்பந்து சாதனைகளில் ரொனால்டோவுக்கு போட்டியாக இருக்கும் அர்ஜென்டினா கால்பந்து நாயகன் மெஸ்ஸி, இந்தப்பட்டியலிலும் அவரை நெருங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் இந்த ஆண்டு இதுவரை 527 கோடியாக உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரன் ஜேம்ஸ், 501 கோடி ரூபாய் வருவாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் நாயகன் ரோஜர் ஃபெடரர் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் துரண்ட் சுமார் 362 கோடி ரூபாயுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் நாயகன் நோவாக் ஜோக்கோவிச் 358 கோடி ரூபாயுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த ரக்பி வீரர் கேம் நியுட்டன் 344 கோடி ரூபாய் வருவாயுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கால்ப் வீரர்களான பில் மிக்கெல்சன், ஜோர்டான் ஸ்பைத் ஆகியோர் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரரான கோஃப்பிரையண்ட் இந்தப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

Related posts: