குக்கின் சாதனை தொடர்கிறது!

Saturday, August 6th, 2016

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3 வது டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய அலைஸ்டர் குக் 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, 13779 ஓட்டங்கள் எடுத்து, அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

குக் 2006 முதல் தற்போது வரை 228 போட்டிகளில் 333 இன்னிங்ஸ் விளையாடி 13780 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.இதற்கு முன்னர் கெவின் பீட்டர்சன் 275 போட்டிகளில் 340 இன்னிங்ஸ் விளையாடி 13379 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை தற்போது குக் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: