உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை இணக்கம்!

Thursday, August 3rd, 2023

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல் நவம்பர் மாதம் 19ம் திகதி வரையில் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் இடம்பெறவுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் அன்றையதினம் நவராத்திரி என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி அட்டவணையை மாற்ற இந்திய கிரிக்கட் சபை யோசனை முன்வைத்தது.

அதன்படி ஒருநாளுக்கு முன்னதாக ஒக்டோபர் 14ம் திகதி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியையும் ஒக்டோபர் 12ம் திகதியில் இருந்து ஒக்டோபர் 10ம் திகதிக்கு மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணை மாற்றம் தொடர்பாக சர்வதேச கிரிக்கட் பேரவையும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் பாகிஸ்தான் கிரிக்கட் சபையை அணுகியிருந்தன.

இந்தநிலையில், குறித்த யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கட் சபை தற்போது இணக்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த இரண்டு போட்டிகளுக்கும் இடையில் பாகிஸ்தான் அணிக்கு நீண்ட இடைவெளி காணப்படுகின்றது.

புதிய போட்டி அட்டவணையை இந்த வாரம் சர்வதேச கிரிக்கட் சபை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: