கிரிக்கெற் அணியை கேவலப்படுத்திவிட்டனர் – சனத் ஜயசூரிய ஆவேசம்!

Thursday, January 12th, 2017

பந்துவீச்சாளர்களை குறைகூற முடியாது. அவர்கள் தென் ஆப்ரிக்க வீரர்களை ஓட்டங்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர். துடுப்பாட்டகாரர்கள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என தலைமை தேர்வாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜயசூரிய கூறியதாவது, தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டகாரர்கள் செயல்பாடு குறித்து நான் கவலையடைந்துள்ளேன்.

எதிர்வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேல் வரிசை துடுப்பாட்டகாரர்கள், போட்டியின் சூழ்நிலை அறிந்து விளையாட வேண்டும்.

பெரும்பாலான வீரர்கள் முதன் முறையாக வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள். அதனால், முதல் டெஸ்ட் போட்டி அவர்களுக்கு சவாலாக இருந்திருக்கும்.

ஆனால், முதல் போட்டியில் செய்த தவறையே ஏன் இரண்டாவது போட்டியிலும் செய்தார்கள் என தெரியவில்லை. ஒரு வீரராவது நிதானமாக விளையாடி இருக்க வேண்டும். ஒருவர் கூட அவ்வாறு விளையாடவில்லை.

ஆனால், பந்துவீச்சாளர்களை குறைகூற முடியாது. அவர்கள் தென் ஆப்ரிக்க வீரர்களை ஓட்டங்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர். துடுப்பாட்டகாரர்கள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.

186001

Related posts: