பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி – ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி

Thursday, October 27th, 2016

பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் நேர் செட்டில் ஹாலெப்பை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

உலக தரவரிசையில் முதல்-08 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜேர்மன்) 6-−4, 6-−2 என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) பந்தாடினார். ஏற்கனவே சிபுல்கோவாவை வீழ்த்தி இருந்த கெர்பர் தற்போதைய 2-வது வெற்றியின் மூலம் அரைஇறுதியை நெருங்கியுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா) 6-−1, 6-−4 என்ற நேர் செட் கணக்கில் டொமினிகா சிபுல்கோவாவை (சுலோவக்கியா) சாய்த்தார்.ஹாலெப், மேடிசன் கீஸ் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். சிபுல்கோவா 2 ஆட்டங்களிலும் தோற்று பின்தங்கியுள்ளார். ‘ரெட்’ பிரிவில் எஞ்சிய ஆட்டங்களில் கெர்பர்- மேடிசன் கீஸ், ஹாலெப்- சிபுல்கோவா மோத உள்ளனர். இதன் முடிவை பொறுத்தே அரைஇறுதிக்குள் நுழையும் 2 பேர் யார் என்பது தெரிய வரும்.‘வையிட்’ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டங்களில் பிளிஸ்கோவா (செக்குடியரசு)-குஸ்னெட்சோவா (ரஷியா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து)-கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் எதிர்கொள்கிறார்கள்.

இரட்டையர் பிரிவிலும் முன்னணி 8 ஜோடிகள் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஒற்றையர் போன்று இதில் ‘ரவுண்ட் ராபின்’ முறை கிடையாது. நேரடியாக கால்இறுதியில் மோதுவார்கள். இதன்படி நடப்பு சம்பியன் சானியா மிர்சா (இந்தியா)- மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி கால்இறுதியில் யங் ஜான் சான்- ஹாவ் சிங் சான் (சீன தைபே) இணையுடன் மல்லுகட்டுகிறது.

90col125708931_4892544_26102016_aff_cmy

Related posts: