கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்வு!

Saturday, October 10th, 2020

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான தினேஸ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி காரியாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 71ம் ஆண்டு நிறைவு இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

இலங்கை இராணுவத்தின் தன்னார்வ படையணியில் திசர பெரேரா மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோர் இணைந்து கொண்டிருந்த நிலையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திர சில்வாவினால் குறித்த இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்களுக்குமான பதவி உயர்வு இலச்சினைகள் அணிவிக்கப்பட்டது.

மேஜர் தினேஸ் சந்திமால் இராணுவத் தளபாட படையணியையும், மேஜர் திசர பெரேரா கஜபா படையணியையும் தற்போது பிரதிநிதித்துவம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: