கனவு அணியில் விராட் கோஹ்லிக்கு இடம் மறுப்பு!

Thursday, November 23rd, 2017

இலங்கை அணியின் பிரபல முன்னாள் வீரரான ரஸல் அர்னால்ட்டின் கனவு அணியில் இந்திய அணி வீரர்கள் இரண்டு பேர் மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர்.

கிரிக்கெட் உலகில் அசத்தி வரும், இளம் வீரர்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் அர்னால்ட் தனது கனவு அணியை தெரிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் தலைவரான கானே வில்லியம்சன் தான் இவருடைய அணிக்கும் தலைவர், துவக்க வீரர்களாக அவுஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, மூன்றாவது வீரராக யாரும் எதிர்பார்க்காத இந்திய அணி வீரர் சடீஸ்வர் புஜாராவும், நான்காவது வீரராக வில்லியம்சனும், ஐந்தாவது வீரராக அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித்தையும் தெரிவு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பராக தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் இருப்பார் எனவும் ஆல் ரவுண்டராக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்சும், அணியில் சுழற்பந்து வீச்சாளர்காளாக இலங்கை அணியின் ரங்கனே ஹெராத்தும், இந்திய அணியின் அஸ்வினும் உள்ளனர்.வேகப்பந்து வீச்சுக்கு நியூசிலாந்து அணியின் டிரண்ட் போல்ட்டும், இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

ரஸல் அர்னால்ட்டின் கனவு அணி David Warner ,Hashim Amla ,Cheteshwar Pujara ,Kane Williamson (C) ,Steve Smith ,Quinton de Kock (wk) ,Ben Stokes ,Ravichandran Ashwin ,Rangana Herath ,Trent Boult ,James Anderson,மேலும் தற்போது உள்ள இளம் வீரர்களில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி மூன்று வித போட்டிகளிலும் அசத்தி வருகிறார், ஆனால் அவர் ரஸல் அர்னால்ட்டின் கனவு அணியில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: