கட்டார் தொடர்பிலான செய்தி போலியானது!
Tuesday, July 18th, 2017
2022ஆம் ஆண்டு, கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, கட்டாரிடமிருந்து பறிக்க வேண்டுமென, 6 அரேபிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தி, போலியான செய்தியென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிற்ஸர்லாந்தின் பிரபலமான செய்தி இணையத்தளத்தைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இணையத்தளமொன்றால் வெளியிடப்பட்ட செய்தி, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பான்டினோ தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகளையும் உள்ளடக்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, உலகின் பிரபலமான செய்தி முகவராண்மைகள் பல, அச்செய்தியை வெளியிட்டிருந்தன.
ஆனால், அப்படியான ஒரு நிலைமை காணப்படவில்லை எனவும், அச்செய்தி பொய்யானது எனவும், தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்: ரஷ்ய அணிக்கு தடை!
இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல் வெற்றி!
அணியில் இருந்து தவான் நீக்கம்!
|
|