ஒழுக்காற்று பிரச்சினையில்  சிக்கிய கித்துருவன், றமித்!

Thursday, June 16th, 2016

இலங்கையின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களான கித்துருவன் விதானகே, றமித் றம்புக்வெல்ல இருவரும், ஒழுக்காற்றுப் பிரச்சினையொன்றில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை காரணமாக, இடம்பெறவுள்ள இலங்கை ‘ஏ” அணியின் இங்கிலாந்துத் தொடரிலிருந்து, இவர்களிருவரும் விலக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தரமுல்லையிலுள்ள இரவு விடுதியொன்றில், ஏற்பட்ட முறுகல் நிலைமையொன்றைத் தொடர்ந்தே, இவர்கள் மீதான கவனம் ஏற்பட்டுள்ளது. இந்த முறுகலின்போது, கித்துருவன் விதானகே, தனியார் வைத்தியசாலையொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், சில நாட்களுக்குப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கவில்லையெனவும் அறிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது, ஒழுக்கவீனக் குற்றச்சாட்டுகளுக்காக, விதானகேவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. றமித் றக்புக்வெல்ல, மதுபோதையில் விமானத்தில் குழப்பங்கள் விளைவித்திருந்தார்.

அவர்களிருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளமையே, அவர்கள் மீது உச்சபட்சமான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்துக்குச் செல்லும் இலங்கை ‘ஏ” அணி, எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: