ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி – சாதனை படைத்தது இந்திய அணி – மூன்றாவது இடத்தில் இலங்கை!

Monday, June 10th, 2024

இருபதுக்கு 20 உலகக் கிண்ண வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த சாதனையை தம்வசப்படுத்தியுள்ளது.

சாதனைப் பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 7 வெற்றிகளைப் பெற்று இந்திய அணி முதலிடத்திலும், பங்களாதேஷ் அணிக்கெதிராக 6 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 6 வெற்றிகளைப் பெற்று இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: