உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச டென்னிஸ் தொழில்முறை வீரர்கள் சங்கத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் இடத்தில் தொடர்ந்தும் நொவேக் ஜொகோவிச் தக்க வைத்து கொண்டுள்ளார்.
அதேவேளை, 2ஆம் இடத்தில் அமெரிக்க வீரர் அன்டி முரே இருப்பதுடன், சான்ட் வாவ்ரிங்கா மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளார்.
அத்துடன், ரபேல் நடால் 4ஆம் இடத்திலும், கெய் நிஷிகொரி 5ஆம் இடத்திலும், கனடாவைச் சேர்ந்த Milos Raonic 6ஆம் இடத்திலும், ரொஜர் பெரடர் 7ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர்.
இதேவேளை, ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரான்ஸைச் சேர்ந்த Nicolas Mahut முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும், Pierre-Hugues Herbert இரண்டாம் இடத்திலும், பிரேசில் நாட்டு வீரர் மார்கெலோ மேலோ மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|