உலக கால்பந்து தொடரில் புதிய தீர்மானம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Wednesday, March 15th, 2023

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மேலும் அதிகமாக 40 போட்டிகள் நடத்தவுள்ளதாக FIFA அறிவிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 2026 ஆம் ஆண்டு வடக்கு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் FIFA கடந்த உலக கோப்பையை விட இந்த உலக கோப்பையில் அதிக போட்டிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

2026 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட 80 போட்டிகளுக்குப் பதிலாக 64 முதல் 104 போட்டிகள் வரை உயர்த்த உள்ளதாக ருவாண்டாவின் கிகாலியிலுள்ள FIFA தலைமை குழு கூட்டத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. போட்டிகளை அதிகப்படுத்துவதன் முதல் அதிக வருமானத்தை உண்டாக்க திட்டமிட்டுள்ளதாக FIFA தெரிவித்துள்ளது.

மேலும் போட்டியை இணைந்து நடத்த கூடிய நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளின் வருவாயை அதிகரிக்க உதவும் என கூறியுள்ளது.

FIFA ஏற்கனவே போட்டியில் கலந்து கொள்ளும் அணியின் எண்ணிக்கையை 32லிருந்து 48ஆக மாற்றியதாக அறிவித்திருந்தது. 16 குழுக்கள் கொண்ட பிரிவில் ஒவ்வொரு குழுவில் தலா 3 அணிகள் கலந்து கொள்ளும் என்பதற்குப் பதிலாக FIFA 4 அணிகளுடன் தலா 12 குழுக்களைக் கொண்டிருக்கும் என கூறியிருக்கிறது.

மேலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 8வது தகுதி சுற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுடன் 32வது தகுதி சுற்றுக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: