தென்னாபிரிக்க அணி குறித்து மேத்யூஸ் கருத்து..

Wednesday, May 17th, 2017

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீளவும் திரும்பியமை குறித்து கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண முன்னோடி பயிற்சி போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“நாம் அணிக்கு தேவையான அனைத்திலும் முன்னேற்பாடாகவே பயிற்சி பெற்றிருக்கின்றோம், தற்போது எஞ்சியிருப்பது இங்கிலாந்து சென்று அந்நாட்டு மைதனத்திற்கு ஏற்ப நம்மை தயார் செய்து கொள்வதே, இந்தப் போட்டிக்காக நிறைய சலுகைகள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது, அதனை கருத்தில் கொண்டு நாம் வெற்றி பெற வழி தேட வேண்டும்… இப்போட்டியில் பங்கேற்கும் 08 அணிகளும் பலம் பொருந்தியதே, பலயீனம் என கூற முடியாது, அதனால் சிறியதோர் பிழை இருந்தாலும் அணி வெளியேறும் வாய்ப்பு அதிகம்… மேலும் மாலிங்க பயிற்சிகளில் பங்கேற்காவிடினும் இந்தியாவில் பயிற்சி பெறுகிறார், மாலிங்க இருப்பது எமக்கு மிகப் பெரும் உந்து சக்தியாகும்..” மேலும், தென்னாபிரிக்க அணி குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“உண்மையிலேயே தென்னாபிரிக்க அணி என்பது சவால்மிக்கதோர் அணியாகும், நாம் அந்த அணியினை எதிர்த்து ஆடும் போது திட்டம் ஒன்றினை வகுத்து வைத்துள்ளோம், நான் நினைக்கின்றேன் நம்மால் அந்த அணியினை தோற்கடிக்க முடியும்….. நமக்கு அதற்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன, அந்த அணிகளுக்கும் நாம் திட்டங்களை தீட்டியுள்ளோம்.’

Related posts: