உலகக்கோப்பையில் இலங்கை – இந்தியா இன்று மோதல்!

Saturday, July 6th, 2019

உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை – இந்தியா இன்று மோதுகின்றன.

இலங்கை அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

அதேசமயம் இந்திய அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகள் ஒரு தோல்வி உள்ளிட்ட12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளதோடு அரையிறுதியையும் உறுதி செய்துள்ளது.

உலகக்கோப்பைப் போட்டியில் கடந்த 1979-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை இந்திய அணியும், இலங்கை அணியும் 8 முறை மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 1979, 1996-ல் இருமுறை, 2007-என 4 முறை வென்றுள்ளது.

இந்திய அணி 1999, 2003, மற்றும் 2011-ம் ஆண்டுகள் என 3 முறை வென்றுள்ளது. 1992-ம் ஆண்டு போட்டி முடிவின்றிப் போனது. ஏறக்குறைய இரு அணிகளும் 8 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் மோதுகின்றன.

Related posts: