ஆஸி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உசேன் போல்ட்!

Wednesday, November 22nd, 2017

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசைன் போல்ட் பயிற்சி அளித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உசைன் போல்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு களத்தில் வேகமாக ஓடுவது குறித்து பயிற்சியளித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப், தெரிவித்திருந்தார்.

ஆடுகளங்களில் வேகமாக ஓடுவது தொடர்பாக உசைன் போல்ட் அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனளிப்பவையாக உள்ளது. ஓடத் தொடங்கும் போது முதல் இரண்டு அடியைக் கவனமாக எடுத்து வைத்தால், வேகமாக ஓட முடியும் என்ற அவரது ஆலோசனை ஆஷஸ் தொடருக்கு நிச்சயம் பலனளிக்கும்’ என்றார்.

உசைன் போல்ட் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் ஓட்டங்களை எடுக்க ஓடும் வீரர்களிடம் போதிய உத்வேகம் இருப்பதில்லை. அதை நான் கவனித்தே வந்திருக்கிறேன். மெதுவாகவே அவர்கள் ஓடவும் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சியின் மூலம் அந்தக் குறை நீங்கும் என நான் நம்புகிறேன்’ என்றார்.

உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படும் உசைன் போல்ட், 100m மற்றும் 200m தடகளப் போட்டிகளில் உலகச் சாதனை படத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப்  தடகளப் போட்டிக்குப் பின்னர், உசைன் ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: