இளையோர் மீது மத்யூஸ் நம்பிக்கை – மத்தியூஸ்!

Sunday, December 25th, 2016

சங்கக்காரா, ஜெயவர்த்தனே, டில்ஷான் ஆகியோர்கள் இடங்களை இளம் வீரர்கள் கண்டிப்பாக நிரப்புவார்கள் என்று இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மேத்யூஸ் தலைமையிலான இளம் இலங்கை அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்க உள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்து பேசிய இலங்கை தலைவர் மேத்யூஸ், அனுபவ வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே, டில்ஷான் ஆகியோர்கள் ஓய்வு பெற்ற பிறகு அணியில் மிகப் பெரிய வெற்றிடம் உள்ளது.ஆனால் அவர்களின் இடங்களை இளம் வீரர்கள் நிரப்பி சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது தென் ஆப்பிரிக்கா சிறப்பாக செயல்பட்டது. அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது சாதாரண காரியம் இல்லை.ஆனால் நாம் முழுத் திறமையை வெளிப்படுத்தினால் கடந்த காலங்களில் பெற்ற வெற்றியை போல் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

mathews_001-1-720x480

Related posts: