இலங்கை – இந்திய ஒருநாள் தொடரில் 3 பிரபல வீரர்கள் நீக்கம்!

Tuesday, August 15th, 2017

இலங்கை அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.தோள்பட்டை காயத்திற்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள லோகேஷ் ராகுலுக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது.அதேபோல் ஓய்வு கொடுக்கப்பட்ட ரோகித் சர்மா, பும்ப்ரா ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ள புதுமுக வீரர் ஷர்துல் தாகூர் சாஹல், அக்சார் பட்டேல், மணீஷ் பாண்டே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷர்துல் தாகூர் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விபரம்.

Related posts: