இலங்கை – அவுஸ்திரேலியா T20யில் களமிறங்கும் ரிக்கி பொண்டிங்!

Wednesday, November 2nd, 2016

 

அடுத்த ஆண்டு இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடருக்கு முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லெக்மெண் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.குறித்த இந்த டெஸ்ட் தொடருக்காக அவர் அப்போது இந்தியாவில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியுடன் இருப்பார்.

இதே நேரத்தில் அடிலெய்டில் நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் யார் பொறுப்பெடுத்துக் கொள்வது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.இந்நிலையில் இந்த பொறுப்பை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஏற்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியாளர் வாய்ப்பு பற்றி ரிக்கி பொண்டிங் கூறுகையில்; லெக்மெண் டெஸ்ட் அணியுடன் இருக்கும் சமயத்தில், யாராவது ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருக்கும் டி20 அணிக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

அது நானாக இருப்பேன் என்று கூறவில்லை. ஆனால் சில மாதங்கள் இருக்கிறது. கண்டிப்பாக இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

1-8

Related posts: