இலங்கை அணி படுதோல்வி!

Thursday, December 21st, 2017

இலங்கை – இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்தியா அணி 93 ஓட்டங்களால் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.இந்திய அணி சார்பில் லோகேஸ் ராஹுல் 61 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.மகேந்திர சிங் தோனி 39 ஓட்டங்களையும் , மனிஸ் பான்டே 32 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 23 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கட்டுக்களையும் , ஹர்திக் பாண்டியா 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.போட்டியின் ஆட்டநாயகனாக யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்பட்டார்.இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

Related posts: