இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவர் காலமானார்!

Monday, October 18th, 2021

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 68 ஆவது வயதில் இன்றுகாலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தேர்ச்சி பெற்ற டெஸ்ட் அணியாக இலங்கை கிரிக்கெட் அணியை மாற்றிய பெருமை அவரையே சாரும்.

திடமான நுட்பத்தைக் கொண்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட பந்துல வர்ணபுர சிறந்த பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அபாரமான பந்து வீச்சு திறன்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் இலங்கை அணி சார்பில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 12 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1982 – 83 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட அணியுடனான தொடரில் பங்கேற்றமைக்காக அவருக்கு ஆயுட்கால கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது.

000

Related posts: