இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தமீம் இஃபால் நீக்கம்!

Thursday, October 5th, 2017

பங்களாதேஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இஃபால் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி போட்டியொன்றின் போது தமீம் இஃபால் இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் 39 ஓட்டங்களை பெற்ற தமீம் இரண்டாவது இன்னிங்சில் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 333 ஓட்டங்களால் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.தமீம் இஃபாலுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் ஒருவார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில் , தமீம் இஃபாலுக்கு பதிலாக சௌமிய சர்ஹார் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேபோல் , பங்களாதேஸ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் இந்த டெஸ்ட் தொடரில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.அது, சகிப் அல் ஹசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள காரணத்தினாலாகும்.2013க்கு பிறகு சகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இஃபால் இன்றி பங்களாதேஷ் அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: