இந்திய அணியை பந்தாடிய ட்ரெண்ட் போல்ட் !

Friday, February 1st, 2019

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.

ஹாமில்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ட்ரெண்ட் போல்ட்டின் அபார பந்துவீச்சினால் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

10 வீசிய ட்ரெண்ட் போல்ட் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 மெய்டன்களுடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் போட்டியில் 5 முறை ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் நியூசிலாந்து வீரர்களில் அதிக முறை 5+ விக்கெட்டுகள் எடுத்த ரிச்சர்டு ஹாட்லீயின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், ஒரே நாட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அதாவது நியூசிலாந்து மண்ணில் 49 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 53 போட்டிகளிலும், அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ 56 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

Related posts: