இங்கிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள 14 பேரடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட்டால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை அணியுடன் 4 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இத் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று 9 ஆம் திகதி எஸ்.எஸ்.ஸி. மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் போட்டி 12 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 3 ஆவது ஒருநாள் போட்டி 15 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 4 ஆவது ஒருநாள் போட்டி 17 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் அணி விபரம் வருமாறு,
இனோக்கா ரணவீர ( அணித் தலைவி), பிரஷாடினி வீரக்கொடி ( உப தலைவி), டினாலி மனோதரா, நிலக்ஷி சில்வா, அமா காஞ்சனா, ஹசினி பெரேரா, சாமரி பொல்ஹம்பொல, சாமரி அத்தப்பத்து, நிபுனி ஹன்சிகா, சிறிபாலி வீராக்கொடி, சுகந்திகா குமாரி, ஒஷாதி ரணசிங்க, ஹன்சிமா கருணரத்ன, அச்சினி குலசூரிய ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|