இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைவர் ஜோ ரூட் !

Tuesday, December 13th, 2016

இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு தலைமை தாங்க, ஜோ ரூட் தயாராக இருப்பதாக, அணித் தலைவர் அலஷ்டயர் குக் தெரிவித்துள்ளார்.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி கண்டிருந்ததை அடுத்து செய்தியளர்களிடம் இதனைக் கூறியுள்ளார்.

எனினும் தாம் பதவி விலகுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்துள்ள நிலையில், அலஸ்ட்டயர் குக்கின் தலைமைத்துவம் தொடர்பில் கேள்வி எழுந்திருந்தது.

இந்திய அணிக்கு எதிரான தொடருடன் அவர் பதவி விலகுவார் என்று முன்னதாகவே செய்திகள் வெளியாகி இருந்தன.எனினும் புதுவருடம் பிறக்கும் வரையில் தாம் இந்த விடயத்தில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்வதாய் இல்லை என்று குக் தெரிவித்துள்ளார்.

ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தற்போதைய துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

201611091939223025_India-vs-England-first-Test-visiters-scored-311-runs-in_SECVPF

Related posts: