ஆஸியின் அதிரடி வீரர் இலங்கை வருகிறார்!

Thursday, August 25th, 2016

இலங்கை அவுஸ்திரேலிய  அணிக்கிடையிலான இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியில் அதிரடி வீரர்  மெக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியில் அதிரடி வீரர் கிளென் மெக்ஸ்வெல் நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாக ட்ரெவ்ஸ் ஹெட் இணைக்கப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியுடன்  இடம்பெற்ற 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட தொடரில் வையிட் வொஷ் ஆகியிருந்த நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலில் இடம்பெற்ற இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்று 1-1 என சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், அணித் தலைவர் ஸ்மித்துக்கு ஓய்வு வழங்கப்பட்டு புதிய தலைவராக வோர்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக இருபதுக்கு -20 தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியில் மெக்ஸ்வெல், கிறிஸ் லின், ஜோன் ஹாஸ்டிங் போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி பல்லேகலையிலும் இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய வீரர்களின் விபரம்,

டேவிட் வோர்னர் ( அணித் தலைவர்), ஸ்கொட் போலண்ட் , ஜேம்ஸ் போல்க்னர் , ஆரோன் பிஞ்ச், ஜோன் ஹாஸ்டிங், ட்ராவிஸ் ஹெட் , மொய்சஸ் கென்றிகியூஸ், கிறிஸ் லின், ஷோன் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல், பீற்றர் நெவில், மிட்செல் ஸ்டார்க் , ஆடம் சம்பா  ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: