ஆப்கானிஸ்தான் – இலங்கை தொடர் – 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு !
Wednesday, May 31st, 2023ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஓய்வில் உள்ள வணிந்து ஹசரங்க உடற் தகுதி பரிசோதனைக்கு தகுதி பெற்றவுடன் மீண்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடை தசையில் காயம் காரணமாக குசல் ஜனித் பெரேரா அணிக்குள் உள்வாங்கப்படவில்லை.
அதனடிப்படையில் இலங்கை அணியில் தசுன் ஷனக, பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, சாமிக்க கருணாரத்ன, துஷான் ஹேமந்த, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, மகேஷ் தீக்ஷன இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாண இளைஞன் டுபாயில் உயிரிழப்பு!
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழ...
|
|