ஆசிய கிண்ணம் –  போட்டி அட்டவணையை எதிர்க்கும் இந்தியா!

Sunday, July 29th, 2018

இந்திய -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் தொடர்பான அட்டவணைக்கு, இந்திய கிரிக்கட் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 18 ஆம் திகதி, தகுதி சுற்று அணியையும், 19 ஆம் திகதி பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி எதிர்க் கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய அணிக்கு அடுத்தடுத்த போட்டிகள் ஒய்வின்றி இடம்பெறுவதால், இந்த அட்டவணைக்கு இந்திய கிரிக்கட் சபை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த அட்டவணையை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts: