ஆசியாவின் நாயகன் : SSC மைதானத்தின் வரலாற்று சாதனை!

Friday, July 20th, 2018

சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டி இடம்பெறும் மைதானமானது முதல் ஒரு புதிய சாதனை ஒன்றுக்கு சொந்தமாகின்றது. ஆசியாவில் அதிக டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்ற மைதானமாக திகழவுள்ளது.
1984ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி மைதானம் போட்டிகளை நடத்த ஆராம்பித்த நிலையில் இதுவரையில் அங்கு 41 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் ஈடன் கார்டன் மைதானத்திலும், பாகிஸ்தானில் கராச்சி தேசிய மைதானத்திலுமே இதுவரையில் 41 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நாளை எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் போட்டியானது 42ஆவது போட்டியாகும்.