அஸ்வின் சாதனையை முறியடிக்க ஜாசீர்; ஷாவுக்கு வாய்ப்பு!

Saturday, October 15th, 2016

மிகக் குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில் 100 இலக்குகளை வீழ்த்திய ஆசியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைக்க பாகிஸ்தான் சுழல் வீரர் ஜாசீர் ஷாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது

அஸ்வின் தனது 18ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் 100ஆவது இலக்கை எட்டினார். இதன் மூலம் மிக விரைவாக 100 இலக்குகளை எட்டிய ஆசியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார். இந்த சாதனையைத் தகர்க்க ஜாசீரக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடிவரும் டெஸ்ட் ஆட்டம் ஜாசீரின் 17ஆவது ஆட்டமாகும். தந்போது 95 இலக்குகளுடன் உள்ள ஜாசீர் இந்த ஆட்டத்தில் இன்னும் 5 இலக்குகளை வீழ்த்தினால் மிக விரைவாக 100 இலக்குகளை எட்டிய ஆசியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் தனது பெயரில் எழுதலாம்.

Aswin_Liveday

Related posts: