அவுஸ்திரேலிய தலைவர் அபார சதம்!

Wednesday, June 26th, 2019

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதம் விளாசியுள்ளார்.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.

இருவரும் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

எனினும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கேப்டன் பிஞ்ச் சதம் அடித்தார். அவர் 116 பந்துகளில் 2 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Related posts: