அரையிறுதியில் ஆதிக்கம் செலுத்துமா மேற்கிந்திய தீவுகள்?

Tuesday, March 29th, 2016

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் சமபலத்துடன் அரையிறுதியில் மோதவுள்ளன.

எதிர்வரும் 31ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

இதுவரை 4 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளன.

அதேசமயம் டி20 உலகக்கிண்ணத்தில் 3 போட்டிகளில் 2ல் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், இந்தியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு லார்ஸ்ட் மைதானத்தில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

கடந்த 2010ம் ஆண்டு பார்படாஸில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

கடந்த 2014ம் ஆண்டு ஆண்டு மிர்பூரில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்தியத் தீவுள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில், இந்தியா வீழ்த்தியது.

இந்த முறை சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.

இந்திய அணியில் கோஹ்லி மிகப்பெரிய பார்மில் இருக்கிறார். அணித்தலைவர் டோனியும் நல்ல நிலையில் உள்ளார்.

தவிர, மற்ற வீரர்களும் எழுச்சிபெறும் பட்சத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் பல அதிரடி வீரர்கள் இருந்தாலும், இந்திய அணிக்கு பெரிய தலைவலியாய் இருப்பது கெய்ல் மட்டுமே.

அவர் களத்தில் நின்றுவிட்டால் எதிரணிக்கு பெரிய அளவு சேதத்தை உண்டாக்குவார்.

எனவே அரையிறுதியில் அவரை சமாளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளது இந்திய அணி.

Related posts: