அணி வீரர்ககளை நம்புங்கள் – உபுல் தரங்க!

Wednesday, August 16th, 2017

இலங்கை அணியின் ரசிகர்கள் ஒருநாள் அணியின் மீது நம்பிக்கை வைக்குமாறு அணித் தலைவர் உபுல் தரங்க கோரிக்கை விடுத்துள்ளார்

சிறிலங்கா கிரிக்கட் ஊடாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து அணிகளுக்கும் கடுமையான காலங்களை எதிர்கொள்ள நேரும்.

எத்தகைய பலம்பொருந்திய அணியாக இருந்தாலும், இந்த வலையத்துக்குள் சிக்கும் ஒரு நிலை ஏற்படலாம்.கடந்த 18 வருடங்களாக இலங்கை அணி அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் சிறந்துவிலங்கி இருந்தமையை மறந்துவிடக் கூடாது

தற்போது அதன் கடுமையான காலத்தில் பயணிக்கிறது.இதில் இருந்து மீளுவோம்.இந்த விடயத்தில் இலங்கை அணியின் மீது அனைவரும் நம்பிக்கை வைத்து, ஆதரவு தருமாறு உபுல்தரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் இந்த மாதம் 20ம் திகதி ஆரம்பமாகிறது.டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணியிடம் இலங்கை 3க்கு0 என்ற கணக்கில் தோல்வியுற்றிருந்த நிலையிலேயே உபுல்தரங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்கு இலங்கை அணியை மாத்திரம் குறைக்கூற முடியாது என்று, முன்னாள் கிரிக்கட் வீரரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தோல்விக்கு சிறிலங்கா கிரிக்கட்டின் முகாமைத்துவமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: