ஸ்மார்ட் போனை கண்காணிப்பு கெமராவாக மாற்றுவது எப்படி?

Friday, September 16th, 2016

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி சிறியதாக உங்கள் வீட்டில் ஒரு கெமரா பாதுகாப்பு முறையை ஏற்படுத்த முடியும். இதை வைபை அல்லது மொபைல் டேட்டா மூலம் செயல்படுத்தி கொள்ள முடியும்.

ஏர்டிராய்டு(Airdroid) என்ற செயலியை உங்களது போனில் பதிவிட்டு, உங்களது மின்னஞ்சல் முகவரியை வழங்கி, கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.உங்களது போன் வைபை நெட்வேர்க் ஒன்றுடன் இணைந்து இருந்தால், IP முகவரியும் அல்லது நீங்கள் மொபைல் டேட்டா மூலம் இணைந்து இருந்தால் வெப் URL முகவரியும் காட்டப்படும்.

Android-App-CCTV-Video-Playback-696x335

நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனை மொபைல் டேட்டா மூலம் கண்காணிப்பு கெமரா ஆக மாற்ற போகிறீர்கள் என்றால், உங்களது கணனியில் இருக்கும் உலாவி ஒன்றில் (Browser)  குறித்த செயலியில் காட்டப்பட்ட URL முகவரிக்கு சென்று, ஏற்கனவே நீங்கள் செயலியில் உருவாக்கிய பயனர் கணக்கு விபரங்களை வழங்கி லொகிங் (Login) செய்யுங்கள்.

1468766684-7996

நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனை வைபை மூலம் கண்காணிப்பு கெமரா ஆக மாற்ற போகிறீர்கள் என்றால், உங்களது கணணியும் மொபைலும் ஒரே வைபை நெட்வேர்க்-இல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1468766737-5945

வைபை நெட்வேர்க் மூலம் ஸ்மார்ட்போனை கண்காணிப்பு கெமரா ஆக மாற்ற, உங்களது போனில் குறித்த செயலியில் காட்டப்பட்ட IP முகவரியை உங்களது கணனியில் இருக்கும் உலாவி ஒன்றில் டைப் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது போனின் கெமரா மூலம் பதிவாகப்படும் காட்சிகள் அனைத்தையும் கணனியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதை நீங்கள் பார்த்து கொள்ளலாம், ரெக்கார்ட்(Record) வசதி மூலம் சேமித்து கொள்ளலாம்.

Related posts: