விண்வெளியில் நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட பேஸ்புக் !

Tuesday, June 7th, 2016

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் இடையிலான கலந்துரையாடல் முதல் முறையாக நேற்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் தங்களின் கேள்விகளை பதிவுசெய்ய நேற்று முன்தினம் மார்க் சுக்கர்பெர்கின் உத்தியோகபூா்வ பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை குறித்த காணொளியை 4.2 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled-4 copy Untitled-3 copy